கருங்கல் :  பெரியாரின் படம், வாசகங்கள் அழிப்பு

போலீசில் புகார்;

Update: 2025-03-20 12:06 GMT
குமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் திராவிட கழக உறுப்பினர். கருங்கல் - செல்ங்கோணம்  சாலை ஓரத்தில் அவருக்கு சொந்தமான கடையில் அவர் திராவிடர் கழக  அலுவலகம்  திறப்பதற்க்கான வேலைகள் நடந்து வந்தது. இந்த அலுவலகத்தின் முன்பக்க சுவரில் பெரியாரின் படம், அவருடைய கருத்துரைகளின் முக்கிய வாசகங்கள் பெயின்டால்  எழுதி வைக்கப்பட்டுள்ளது.        இந்த நிலையில் இன்று காலை ஜெயக்குமார் அங்கு வந்த போது அலுவலகத்தின் சுவற்றில் இருந்த பெரியார் படத்தில் அவரது கண், வாய்ப்பகுதிகளில் பெயிண்ட் சுரண்டி எடுக்கப்பட்டது. மேலும் சுவற்றில் எழுதப்பட்டிருந்த பெரியாரின் முக்கிய வாசகங்கள் சில எழுத்துக்கள் அழிக்கப்பட்டிருப்பதை கண்டார்.      இது குறித்து ஜெயக்குமார் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News