கன்னியாகுமரியில் யூபிஐ பண பரிமாற்ற வசதி செய்ய வேண்டும்
சுற்றுலா பயணிகள் கோரிக்கை;
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். தற்போது கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும், 133 அடி உயர திருவள்ளூர் சிலைக்கும் இடையே கடலுக்கு மேல் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை காண தினமும் ஏராளமானவர்கள் வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை இரட்டிப்பாகி உள்ளது. இதற்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூன்று படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த படகில் பயனை செய்வதற்காக சாதாரண டிக்கெட்டுக்கு ரூ. 75-ம், தட்கல் டிக்கெட்டுகளுக்கு ரூ. 300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருக்கிறது. ஆனால் சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுக்கும் கவுண்டருக்கு அருகில் வந்ததும் யூபிஐ என்று சொல்லப்படும் மின்னணு மாற்றம் மூலம் பணம் செலுத்த முயற்சி செய்தால் அதற்கான வசதிகள் அங்கு இல்லை என்று சொல்லி மறுக்கப்படுகிறது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் அதிக அளவில் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்ற ஒரு சுற்றுலாத்தலத்திலும் யு பி ஐ வசதி இல்லாதது மிகுந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்டம் நிர்வாகம் உடனடியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக கட்டண கவுண்டர்களில் யூபிஐ வசதியை ஏற்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர்.