அடிநீயம் செடிகளை பார்த்து ஆச்சரியத்தில் வியந்த ஆட்சியர்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வுக்கு வந்த ஆட்சியர் பிரதாப் தோட்டக்கலைத் துறை மூலம் வளர்க்கப்பட்டு வந்த அடிநீயம் செடிகளை பார்த்து ஆச்சரியத்தில் வியந்து போனார்.;
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வுக்கு வந்த ஆட்சியர் பிரதாப் தோட்டக்கலைத் துறை மூலம் வளர்க்கப்பட்டு வந்த அடிநீயம் செடிகளை பார்த்து ஆச்சரியத்தில் வியந்து போனார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட லட்சுமி வாக்கம் கிராமத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நிழல் வலை குடில்கள் மூலம் அடிநீயம் செடிகளை சாகுபடி செய்து அழகாக பராமரிக்கப்பட்ட நிலப்பரப்பினை பார்வையிட்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனார். பின்னர் அவற்றின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார் தொடர்ந்து இதேபோன்று தோட்டக்கலைத் துறை மூலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளை ஊக்குவித்து வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வலை நிழல் குடில்கள் மூலம் அடி நீயம் செடிகளை வளர்க்க ஊக்குவிக்கும் படி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்