புழலில் பெண் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை
புழலில் பெண் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை;
புழலில் பெண் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை புழல் அடுத்த கதிர்வேடு, பாலாஜி நகரை சேர்ந்தவர் ஜெயராம் இவர் டெய்லராக வேலை செய்து வருகிறார் . அவரது மனைவி நரசம்மா( 42 ) இவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது மகள்கள் இருவர் அவர்கள் விருப்பம் போல் திருமணம் செய்து கொண்டதால் மனவிரக்தியில் இருந்த நரசம்மா நேற்றிரவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்றார் . விடியற்காலை தனது கணவர் மனைவியை காணாமல் தனது வீட்டின் மேல் அறைக்கு சென்று பார்த்ததில் அங்கு மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது . இது குறித்து தகவல் அறிந்த புழல் போலீசார் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று வந்து சடலத்தை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.