சாலை விபத்தில் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பட்டாபிராம் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update: 2025-03-20 15:16 GMT
சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பட்டாபிராம் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். *ஆவடி காவல் ஆணையரகம் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த மெர்சி-வ/35 (2016 batch) என்பவர் காலை வழக்கம் போல் பட்டாபிராமில் பணிக்கு வர திருத்தணி அருகே சொந்த ஊரிலிருந்து திருத்தணி ரயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார் அப்பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதி இடறி லாரி மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்... திருத்தணி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News