இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை;

Update: 2025-03-21 13:19 GMT
திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் என்று மர்ம அவர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் இந்த படுகொலை செய்யப்பட்ட லோகேஷன் மீது திருவள்ளூர் மாவட்டம் புல்ராம்பக்காம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது கடந்த பத்து தினங்களுக்கு முன்னதாக பூண்டி அருகே உள்ள கடையில் நின்று கொண்டிருந்த லோகேஷ் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியால் வெட்டும் காட்சிகளும் பின்னர் அருகில் இருந்தவர்கள் லோகேஷ் காப்பாற்றுவது போன்ற காட்சிகளும் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இந்த கொலை நடைபெற்றுள்ள திருவலாங்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் ராணுவ வீரர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார் இந்த காவல்நிலையத்தில் காவல் நிலைய ஆய்வாளர் பணியிடம் சில மாதங்களாக காலியாக உள்ளது 20க்கும் மேற்பட்ட போலீசார் பற்றாக்குறையாக உள்ளது பல வருடங்களாக தனிப்பிரிவு காவலர் மற்றும் உளவு பிரிவு காவல்துறை அதிகாரி இந்த காவல் நிலையத்தில் உட்பட்ட பகுதியில் பணிபுரிகின்றனர் இவர்கள் அரசின் கவனத்திற்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் எடுத்து செல்லாதது இதுபோல் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது மேலும் இந்தத் தொடர் கொலை காரணமாக இந்த பகுதி திருவாலங்காடு பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர் காரணம் திருவாலங்காடு போலீசார் போதிய ரோந்து பணியில் பகல் மற்றும் இரவு வேலைகளில் ஈடுபடுவதில்லை இந்தப் பகுதியில் போதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்த வில்லை என்று குற்றச்சாட்டை திருவாலங்காடு பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர் திருவாலங்காடு பகுதி மக்களின் அச்சத்தை போக்க வேண்டி தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்துள்ளனர்

Similar News