அரசு பள்ளி நூற்றாண்டு விழா
வெள்ளக்கோயில் ஒன்றியம் வீரசோழபுரம் அரசு நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா;

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வீர சோழபுரம் அரசு நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா நேற்று இரவு நடை பெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை செ.பா.தனலட்சுமி வரவேற்றார். முன்னாள் மாணவர் எம்.சுப்புரத்தினம் தலைமை தாங்கினார். வீரசோழபுரம் ஊராட்சி மன்ற முன் னாள் துணைத்தலைவர் சி.அமுத அரசி, பள்ளி முன் னாள் மாணவர் ப.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித் தனர். வெள்ளகோவில் வட்டார கல்வி அலுவலர் வி.சிவகு மார் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் மாணவ-மாணவி கள் பெற்றோர், ஊர் பொதுமக்கள் மற்றும் வட்டார அரசு பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.