ராசிபுரம் அடுத்த அத்தனுர் பெருமாள் கோவில் மலை பகுதியில் காட்டுத் தீ..
ராசிபுரம் அடுத்த அத்தனுர் பெருமாள் கோவில் மலை பகுதியில் காட்டுத் தீ..;

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் பகுதியில் அத்தனூர் அம்மன் கோவில் அமைந்து உள்ள நிலையில் அதன் அருகில் பெருமாள் மலை கோவில் அமைந்துள்ளது. பெருமாள் கோவில் மலை பகுதியில் பன்றி,மான்கள், நரி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வரும் நிலையில் தற்போது கோடை வெயில் தொடங்கியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் பெருமாள் கோவில் மலை பகுதியில் காட்டுக்கு தீ எரிய தொடங்கியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ராசிபுரம் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இருந்த போதிலும் தீயானது மலையின் மேல் பகுதியில் பரவிய நிலையில் தொடர்ந்து தீயணைக்கும் நிலையில் ஈடுபட்டு வருகின்றனர்.சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பெருமாள் மலை கோவிலில் காட்டுத் தீ எரிந்ததால் அரிய வகை மூலிகை செடிகள் மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின..