
புதுகை ஆலங்குடி குறிஞ்சிநகரை சேர்ந்த மணிராஜ் (57), தமிழரசி (50), மகாவிஷ்ணு (03) மூவரும் பைக்கில் வெட்டன் விடுதியிலிருந்து ஆலங்குடிக்கு சென்ற போது பாச்சிக்கோட்டை ஆர்ச் அருகே அவர்களுக்கு பின்னால் பைக்கில் வந்த ஹரிஹரசுதன் (32) என்பவர் மோதியதில் இருவருக்கு தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டு புதுகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஆலங்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.