நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் காவலன் செயலி பதிவிறக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி.

காவலன் எஸ்ஓஎஸ் செயலி" பதிவிறக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கல்லூரி வளாகத்தில் அன்று நடத்தியது.;

Update: 2025-03-26 06:33 GMT
நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் காவலன் செயலி பதிவிறக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி.
  • whatsapp icon
நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அமைப்பானது, பகடிவதை & பாலியல் தொல்லை எதிர்ப்பு மையத்தின் பங்களிப்புடன் "காவலன் எஸ்ஓஎஸ் செயலி" பதிவிறக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கல்லூரி வளாகத்தில் அன்று நடத்தியது. நிகழ்விற்கு கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் நகர காவல்துறை ஆய்வாளர் கே. கபிலன் கலந்து கொண்டு மாணவிகளிடம் உரையாற்றினார். காவலன் எஸ்ஓஎஸ் செயலி யினை பதிவிறக்கம் செய்வதால் மகளிர்க்கு கிடைக்கும் நன்மைகள், அதனை எவ்வாறு பயன்படுத்துவது, ஆபத்தான சூழ்நிலைகளில் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பேசினார். நிகழ்வில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் எஸ். சாந்தகுமார் மற்றும் எம். தியாகராஜூ ஆகியோர் பேசினர். நிகழ்வில் துணை முதல்வர் ஆர். நவமணி, என்எஸ்எஸ் அலுவலர்கள் எம். சசிகலா & வீ‌. கோகிலா, பகடிவதை & பாலியல் தொல்லை எதிர்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் எம். மாலதி, நிர்வாக அலுவலர் என். எஸ். செந்தில்குமார் உட்பட கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன் நன்றியுரை ஆற்றினார்.

Similar News