மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியோருக்கு மறுவாழ்வு நிதி அளிப்பு நிகழ்ச்சி

மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியோருக்கு மறுவாழ்வு நிதி அளிப்பு நிகழ்ச்சி;

Update: 2025-03-25 16:06 GMT
மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியோருக்கு மறுவாழ்வு நிதி அளிப்பு நிகழ்ச்சி
  • whatsapp icon
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியோருக்கு மறுவாழ்வு நிதி அளிப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று, 41 பேருக்கு தலா 50,000 ரூபாய் வீதம், 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், உதவி ஆணையர் கலால் ராஜன்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதன் பின், தாட்கோ திட்டத்தின் கீழ் கறவை மாடுகள், சுற்றுலா வாகனம், ஆட்டோ, ஜவுளிக்கடை, பொருட்கள் விற்பனை, சென்ட்ரிங் உள்ளிட்ட தொழில் துவங்க, 24 பயனாளிகளுக்கு, 43.03 லட்சம் ரூபாய் மானியம் அளிக்கப்பட்டது. மேலும், துாய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டை மூன்று பேருக்கும், ஒருவருக்கு காப்பீடு அட்டையையும் கலெக்டர் வழங்கினார்.

Similar News

சாவு