கோவை:அடுக்குமாடி குடியிருப்பு தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை

செல்வபுரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மைய அலுவலகத்தை உக்கடம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர்.;

Update: 2025-03-27 09:36 GMT
  • whatsapp icon
கோவை உக்கடம்-செல்வபுரம் சாலையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக 222 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், வீடுகள் கட்டப்பட்டு பல நாட்களாகியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தூய்மைப் பணியாளர்கள் புதிய வீடுகள் முன்பு போராட்டம் நடத்தினர். பூட்டை உடைக்க முயன்றனர். இதையடுத்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை செல்வபுரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மைய அலுவலகத்தை உக்கடம் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், எவ்வித தீர்வும் கிடைக்காததால் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் விரைந்து வந்து கோவை தெற்கு தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒதுக்கீடுக்கான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Similar News