கோவை: நூற்றாண்டு விழா- முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது;

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பல தலைமுறைகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என திரளானோர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது பள்ளித் தோழர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்த மாணவர்கள், தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். விழாவின் தொடக்கமாக, பள்ளித் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து, பள்ளியின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிக் குறித்து சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன. விழாவில், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. முன்னாள் மாணவர்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர். கல்வித்துறையின் சிறப்பு விருந்தினர்கள், பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர். மேலும், பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தனர்.