தக்கலை : இளம்பெண்ணை மிரட்டியவர் கைது

சைபர் கிரைம் நடவடிக்கை;

Update: 2025-03-27 11:53 GMT
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடன் நெருங்கி பழகிய நபர் தன்னுடைய ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டி வருவதாக  கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த குற்றவாளியை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார்..      உத்தரவின்படி, சைபர் கிரைம் காவல் நிலைய உதவி காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் மேற்பார்வையில், ஆய்வாளர் சொர்ண ராணி, உதவி ஆய்வாளர் அஜ்மல் ஜெனிப்  தலைமையில்  போலீசார், குற்றவாளியை  கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.        இந்நிலையில் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதாக கூறி இளம்பெண்ணை மிரட்டிய தக்கலை, பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகன் ஜெயக்குமார் (எ) நாஞ்சில் ஜெயக்குமார்(50) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார் .    சிறப்பாக செயல்பட்டு குற்றவாளி கைது செய்து சைபர் கிரைம் போலீசாை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Similar News