எம்.பி ராஜேஷ்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சகதீப் தங்கர்.

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான சகதீப் தங்கர் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் கே.ஆர்.இராஜேஸ்குமார் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து புகழாரம்.;

Update: 2025-03-27 14:53 GMT
எம்.பி ராஜேஷ்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய  இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சகதீப் தங்கர்.
  • whatsapp icon
கே.ஆர்.இராஜேஸ்குமார் தமிழ்நாட்டில் இருந்து முதல் முறையாக 2021 இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 2022 இல் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது இளமை பருவத்தில் அகில இந்திய வானொலியின் (AIR) நிருபராக பணியாற்றினார்.கிராமப்புற, பழங்குடி, விவசாயிகள் மற்றும் கூட்டுறவுத் துறைகளுக்காகப் பணியாற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவர் கிராமப்புறங்களில் கூட்டுறவுகளை தீவிரமாக ஊக்குவிப்பதன் மூலம் விவசாயக் குழுக்களின் நலனையும் பழங்குடி சமூகங்களுக்கு முக்கியமான சாலை உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் ஒரு உயர் தொழில்நுட்ப கூட்டுறவு பால் பண்ணையை நிறுவியதிலும், தமிழ்நாட்டின் ஊரக கிராமப் பகுதிகளில் குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தியதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். சமீபத்திய காலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதில் அவரது பணி முக்கியமானதாகும். இன்று பிறந்தநாள் காணும் கே ஆர் என் ராஜேஷ்குமார் பாராளுமன்ற மாநிலங்களவை சார்பில் நீண்ட ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

Similar News