சுரங்கப் பாதை அமைப்புக்கான ஆய்வு

ஆரல்வாய்மொழி;

Update: 2025-03-28 00:23 GMT
ஆரல்வாய்மொழி பேரூராட்சி 9-வது வார்டில் உள்ள மங்கம்மாள் சாலை ரயில் சந்திக்கடவில் சுரங்கப்பாதை மற்றும் அணுகு சாலை அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்றது.  வட்டாரப் பொறியாளர் முனீஸ்வரன், சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர், சுமார் 300 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாதை மற்றும் அணுகு சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டனர்.  இந்நிகழ்ச்சியில் இளநிலை பொறியாளர் பாபு, 9-வது வார்டு கவுன்சிலர் மணி, சதீஷ்குமார் மற்றும் நில அளவையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News