கோவை: வர்த்தகம் செய்வது போல் பண மோசடி செய்தவர் கைது !
ஆன்லைன் டிரேடிங்கில் பணம் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்தவர் கைது.;
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் எஃகு(steel trading) வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார்.கடந்த 07.11.2024 அன்று அவரது கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக TRADE INDIA இணையதளம் மூலம் ஸ்ரீ முருகப்பா ஸ்டீல் & ஹார்டுவேர் என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டு ரூபாய் 14,72,263 பணம் செலுத்தியுள்ளார். அதன் பிறகு இவர் தான் மோசடி செய்யப்பட்டு பணத்தை இழந்ததை அறிந்துள்ளார். பணத்தை இழந்த நபர் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 08.03.202 அன்று புகார் கொடுத்தார். காவல்துறையினரின் விசாரணையில் சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் (43) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்து. இந்நிலையில் நேற்று சைபர் கிரைம் காவல் துறையினர் சந்திரசேகரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் மேற்படி நபர் தமிழ்நாட்டில் (மதுரை மற்றும் ஈரோடு), ஹரியானா, பெங்களூர், மும்பை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் மூலம் வர்த்தக மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளதும் பல்வேறு மாநிலங்களில் சைபர் கிரைம் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது, சந்திரசேகரின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டு, மோசடிக்கு பயன்படுத்த லேப்டாப்கள், செல்போன்கள் மற்றும் வங்கி பாஸ்புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.