கோவை: காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும்-சுந்தரராஜன் பேட்டி!

தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர் வேலை நிறுத்ததை முடிவுக்கு கொண்டு வர எண்ணெய் நிறுவனங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை, தங்களது போராட்டம் தொடர்வதாக எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.;

Update: 2025-03-28 03:19 GMT
தென் மண்டல எல்.பி.ஜி லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுந்தரராஜன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது பேசியவர், 3 ஆயில் நிறுவனங்களும் டெண்டர் வழங்கி உள்ளனர் எனவும், இதில் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமான அம்சங்கள் இருப்பதால் விதிகளை மாற்ற கோரிக்கை விடுத்து இருந்தோம் எனவும், ஆனால் அவர்கள் தெரிவித்த விதிமுறைகள் லாரி உரிமையாளர்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் வேலை நிறுத்த போராட்டத்தினை துவங்கி இருப்பதாக தெரிவித்தார். நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை எனவும், முக்கிய பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கவில்லை என்பதால் காலவரையறை வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்கின்றோம் எனவும் சுந்தர்ராஜன் தெரிவித்தார். மும்பையில் இருந்து எண்ணை நிறுவனங்களின் செயல் இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர் எனவும் அவர்கள் உறுதியாக எதையும் சொல்ல வில்லை என்பதால், நாங்களும் எங்களது 1500 உறுப்பினர்களை கலந்து பேசாமல் இப்போது எந்த முடிவை சொல்ல முடியாது, காலவரையற்ற போராட்டம் தொடர்வதாக சொல்லி வந்து விட்டோம் என தெரிவித்தார்.

Similar News