வள்ளியூர் கோவிலில் நந்தி பெருமானுக்கு சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை;

Update: 2025-03-28 03:43 GMT
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சமேத சொக்கநாதர் சிவாலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாட்டில் நந்தி பெருமானுக்கு பல்வேறு அபிஷேக நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை பூஜை நடந்தது. தொடர்ந்து சொக்கநாதர் சப்பரத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி பவனி வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News