
நெல்லையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களில் காலை முதல் பொதுமக்கள் படையெடுத்து நீர், மோர்,தர்பூசணி பழங்கள் வாங்கி அருந்தி செல்கின்றனர்.