
திருமயம் அருகே உள்ள குலமங்களத்தை சேர்ந்தவர் அழகேந்திரன். விவசாயி. இவரது மகன் சந்தோஷ் (17). திருமயத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாமாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை திருமயத்தில் இருந்து பொன்னமராவதி செல்லும் தனியார் பஸ்சில் ஏறி படிக்கட்டில் நின்றபடி பயணித்தார். பெருந்துறை ஆலமரம் அருகே வேகத்தடையில் பஸ் ஏறியபோது, சந்தோஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமைடந்த அவரை. அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சந்தோஷ் உயிரிழந்தார். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.