கோவை: அவுட்டுக்காய் வெடித்து நாய் பலி- ஒருவர் கைது !

கோவை, தொண்டாமுத்தூர் பச்சாபாளையத்தில் காட்டு பன்றியை பிடிக்க வைத்த அவுட்டு காய் வெடித்து நாய் உயிரிழந்த வழக்கில் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2025-03-28 04:49 GMT
கோவை: அவுட்டுக்காய் வெடித்து நாய் பலி- ஒருவர் கைது !
  • whatsapp icon
கோவை, தொண்டாமுத்தூர் பச்சாபாளையத்தில் காட்டு பன்றியை பிடிக்க வைத்த அவுட்டு காய் வெடித்து நாய் உயிரிழந்த வழக்கில் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இருட்டு பள்ளம் அடுத்த பச்சினாம்பதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர், தனது தோட்டத்தில் நாய் வளர்த்து வந்தார். இந்நிலையில் தனது தோட்டத்தின் அருகே உள்ள சுப்பிரமணியின் அண்ணன் இந்திரன் தோட்டத்தில் கடந்த 24 ஆம் தேதி இரவு சுப்பிரமணி தனது நாயை விட்டு உள்ளார். அப்பொழுது தோட்டத்தில் இருந்து அவுட்டுக்காயை நாய் கடித்த போது வெடித்ததில் தலை சிதறி உயிரிழந்தது. இது குறித்து சுப்பிரமணி காருண்யா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் மாசிலா முகாசிமங்கலத்தைச் சேர்ந்த ஆண்டியப்பன் என்பவர் காட்டுப்பன்றி மற்றும் முயலை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்திருந்தது தெரிய வந்தது. காவல் துறையினர் ஆண்டியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது வீட்டில் இருந்த முயலுக்கு சுருக்கு வைக்கும் கம்பி, அவுட்டுக் காய்கள் பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Similar News