குமரி மாவட்டம் குறும்பனை பகுதி 6-ம் அன்பியத்தை சேர்ந்தவர் ஜாண் சுஜின் பிரதிப்(33). கடல் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை கருங்கல் - தேங்கா பட்டணம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கீழ்குளம் சி எஸ் ஐ சர்ச் பகுதியில் செல்லும்போது, எதிர் திசையில் அதிவேகமாக வந்த மினி டெம்போ ஒன்று பைக் மீது மோதி இடித்து தள்ளியது. இதில் படுகாயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காஞ்சிரேகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக இறந்த பிரதீப் சகோதரர் ஜாண் பெனடிக்ட் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.