கோவை: வேளாண் பல்கலை துணைவேந்தர் பதவிக்காலம் நிறைவு !

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகிக்கும் முனைவர் கீதாலட்சுமியின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 (இன்று) தேதியுடன் நிறைவடைகிறது.;

Update: 2025-03-28 07:18 GMT
கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகிக்கும் முனைவர் கீதாலட்சுமியின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் (இன்று) தேதியுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் துணைவேந்தராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆர். கிரிலோஷ் குமார், பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகச் சட்டம் 1971 பிரிவு 11 (4) இன் படி, பதிவாளர் துணைவேந்தராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான தேவையான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியுள்ளது. இந்த தகவல், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், வேளாண்மை-உழவர் நலத்துறை, தலைமைச் செயலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News