போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம் 

கன்னியாகுமரி;

Update: 2025-03-28 12:37 GMT
தமிழ்நாட்டில் ஏப்ரல் 15-ம் தேதி வரை வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இயல்பைவிட வெப்பம் அதிகரிப்பதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின்   உத்தரவின் பேரில் குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம் குளச்சல் உட்கோட்டத்தில் பணிபுரியும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு குளச்சல் அண்ணா சிலை சந்திப்பில் வைத்து இளநீர் மற்றும் ஜூஸ் ஆகியன வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.         அதேபோல்  கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  மகேஷ் குமார் கன்னியாகுமரி உட்கோட்டத்தில் பணிபுரியும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு கன்னியாகுமரியில் வைத்து தர்பூசணி மற்றும் மோர் ஆகியன வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். போலீசார் தங்களுடைய பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.

Similar News