கன்னியாகுமரி அருள்மிகு சன்னதி தெரு விஸ்வநாதர் திருக்கோயிலில், சட்டமன்ற அறிவிப்பு 2023-24 ம் ஆண்டின் படி திருக்கோயில் நிதியின் மூலம் திருப்பணி வேலைகள் ரூ.11.20 லட்சமும், அருள்மிகு சக்கர தீர்த்த விஸ்வநாதர் திருக்கோயிலில், ரூ.24.00 லட்சம் செலவில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான துவக்க விழா பூஜைகள், இன்று காலை 9. 00 மணி அளவில் நடந்தது. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், மராமத்து பொறியாளர் ராஜ்குமார், கன்னியா குமரி பகவதி அம்மன் கோயில் மேலாளர் ஆனந்த், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் ஸ்டிபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, பேரூராட்சி கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ், திமுக அணிகளின் துணை அமைப்பாளர்கள் நிஷார், சுந்தரம், அன்பழகன், திமுக நிர்வாகிகள் நாகராஜன், பிரேமலதா, வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா உட்பட பலர் பங்கேற்றனர். இது போல், லீபுரம் அருள்மிகு அளத்து பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில், ரூ.24.50 லட்சம் செலவிலும் திருப்பணிகள் நடைபெறுகிறது. இதன் துவக்க விழாவும், குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தலைமை யில் நடந்தது.