விபத்தில் காயமடைந்த வெல்டர் உயிரிழப்பு

குலசேகரம்;

Update: 2025-03-28 12:56 GMT
குலசேகரம் அருகே திருவரம்பு பகுதி சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (45) இவர் வெல்டராக பணி செய்தார். இவரது மனைவி சோபிகா கீரிப்பாறை காவல் நிலையத்தில் போலீசாக உள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஜஸ்டின் ராஜ் தனது பைக்கில் குமரனகுடி பகுதி வழியாக செல்லும் போது நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்துக்கு மருந்து பார்க்காமல் அவர்கள் செல்லும் ஒரு ஜெப கூடத்தில் பிரார்த்தனை செய்து வந்துள்ளார்.      பின்னர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அங்கு உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கு வைத்து நேற்று ஜஸ்டின் ராஜ்  யிரிழந்தார். இது குறித்து அவரது அண்ணன் மாசிலாமணி குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜஸ்டின் ராஜ் உடலை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News