சூலூர்: வீடு புகுந்து நகை திருடியவர் கைது !
வீடு புகுந்து 10 பவுன் நகை திருடிய உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் கைது.;
கோவை மாவட்டம் சூலூர் அடுத்துள்ள மயிலம்பட்டி, கரையான் பாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண்மணி ஆல்ஃபா கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கடந்த வாரம் காலை 8 மணிக்கு வேலைக்குச் சென்று விட்டு மாலை 5.30 மணிக்கு வீடு திரும்பியபோது, வீடு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இந்த திருட்டு சம்பவத்தில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அகனு என்பவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையைத் தொடர்ந்து குற்றவாளியை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட 10 சவரன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர் அதே மயிலம்பட்டி பகுதியில் மற்றொரு வீட்டில் திருட முயற்சி செய்ததாகவும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அகனுவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.