கரூரில் வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவருக்கு பணி ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கரூரில் வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவருக்கு பணி ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.;
கரூரில் வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்றவருக்கு பணி ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கரூர்- சேலம் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில், கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய தனியார் வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். மொத்தம் 180 நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்வதற்கான முகாமை அமைத்து வேலைவாய்ப்பு கேட்டு தேடி வந்தவர்களை நேர்காணல் செய்தனர். இதில் அவரவர் படித்த படிப்புக்கேற்ற, திறமைக்கேற்ற வேலைக்கு நிறுவனங்கள் தேர்வு செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பணி ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், தனியார் பள்ளியின் தாளாளர் ராமசாமி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பணி ஆணைகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகள் தமிழக அரசுக்கும்,அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.