புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ரமலான் பெருநாள் கொண்டாடப்படுவதால் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகாமையில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமிய பெருமக்கள் ஒரே இடத்தில் தொழுகை மேற்கொண்டனர். இந்நிலையில் அனைவரும் ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். பள்ளிவாசலில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழுகையை மேற்கொண்டனர்.
