மின் கம்பிகளை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மின் கம்பிகளை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு;

Update: 2025-04-03 07:58 GMT
மின் கம்பிகளை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
  • whatsapp icon
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் குப்பம் பகுதியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகள், பகிங்ஹாம் கால்வாய் குறுக்கே செல்கின்றன. கால்வாய் கரைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மின்கம்பத்திற்கும் உள்ள இடைவெளி, 150 மீட்டர் துாரம் உள்ளதால், மின்கம்பிகள் கால்வாய் மீது தாழ்ந்து செல்கின்றன. மேலும் பளு தாங்காமல், மின்கம்பிகள் அடிக்கடி அறுந்து கால்வாயில் விழுகின்றன. இதனால் கால்வாயில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது விழுந்து, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.அறுந்து விழும் மின் கம்பிகளை, படகுகள் வாயிலாக இழுத்துப் பிடித்து கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளதால், மின்கம்பி அறுந்தால் மின்தடை ஏற்பட்டு, நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கால்வாய் குறுக்கே செல்லும் மின்கம்பிகளை அகற்றி, அருகே உள்ள பயன்பாடு இல்லாத பழைய பாலம் வழியாக, மின் கம்பங்கள் அமைத்து, மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் கம்பிகளை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News