திருப்புகலூர் ஊராட்சியில் பெண்கள் - குழந்தைகளுக்கான

பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம்;

Update: 2025-03-31 06:07 GMT
திருப்புகலூர் ஊராட்சியில் பெண்கள் - குழந்தைகளுக்கான
  • whatsapp icon
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் திட்ட இயக்குனர் சித்ரா ஆலோசனையின் பேரிலும், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் இந்திராணி வழிக்காட்டுதலின் பேரிலும், வட்டார இயக்க மேலாளர் அறிவுநிதி தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில், பெண்கள் மற்றும் குழந்தைக்கான பாதுகாப்பு சட்டங்களை பற்றி இந்திய அரசியலமைப்பு சட்டம், பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை, பாதுகாத்தல், தடுத்தல், குறைதீர் பாதுகாப்பு சட்டம், போக்சா சட்டம், குடும்ப வன்முறை தடைச் சட்டம், குழந்தைகள் திருமண தடைச் சட்டம், பெண்கள் மீதான வன்முறைகள் சம்பந்தப்பட்ட இந்திய தண்டனை சட்டம், மாற்றுத் திறனாளிகள் நல உரிமைகள் சட்டம் ஆகியவை குறித்து, சமுதாய வளப் பயிற்றுநர்கள் கூடுகை மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு, வட்டார அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள், பிற துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில், வட்டார ஒருங்கிணைப்பாளர் இந்துஜா நன்றி கூறினார்.

Similar News