ரம்ஜான் பண்டிகைக்காக பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

ரம்ஜான் பண்டிகைக்காக zomato மூலம் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி;

Update: 2025-04-01 12:54 GMT
ரம்ஜான் பண்டிகைக்காக zomato மூலம் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் கௌதம்.இவர் ரம்ஜான் பண்டிகைக்காக திருநின்றவூர் காதர் பாய் பிரியாணி கடையில் சொமோட்டோவில் 1 மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். அப்போது,கடையில் பணிபுரியும் நபர்கள் சூடாக 1 மட்டன் பிரியாணியை கொடுக்க சொமோட்டோ ஊழியர் அதனை பெற்றுக்கொண்டு கௌதமிடம் டெலிவரி செய்துள்ளார்.அதை சாப்பிட பிரித்து பார்த்த போது பிரியாணியில் கூல் லிப் போதை பொருள் இருந்துள்ளது.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கௌதம் பிரியாணி கடைக்கு சென்று முறையிட்டுள்ளனர். அப்போது, பிரியாணி கடையில் இருந்தவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.இதனால், ஆத்திரமடைந்த கௌதம் உணவக பணியாளர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.பிரபலமான ஓட்டல் என்பதால் பலரும் நம்பி சாப்பிடக்கூடிய இந்த ஓட்டலில் இதுப்போன்ற சம்பவங்களின் போது கூட திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் அலட்சியம் காட்டும் இவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News