மண்டல விளையாட்டு போட்டியில் சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி அணி சாம்பியன்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு;
சேலம் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு நாமக்கல்லில் கடந்த மாதம் குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மண்டல அளவில் நடந்த இப்போட்டியில் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இறகுப்பந்து, செஸ், கைப்பந்து, கோ-கோ, ஆக்கி, மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் முதல் இடமும், கேரம், கூடைப்பந்து, கைப்பந்து மற்றும் எறிபந்து ஆகிய போட்டிகளில் 2-ம் இடமும், கிரிக்கெட் மற்றும் பூப்பந்து போட்டிகளில் 3-ம் இடமும் பெற்றனர். இதேபோல் குழு விளையாட்டு போட்டியில் 210 புள்ளிகளும் தடகள போட்டியில் 64 புள்ளிகள் என மொத்தம் 274 புள்ளிகள் பெற்று சேலம் மண்டல அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், விளையாட்டுக்கான சிறந்த பாலிடெக்னிக் என்ற விருதையும் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பெற்றனர். மேலும் இந்த விருதை தொடர்ந்து 15 ஆண்டுகள் இந்த பாலிடெக்னிக் மாணவர்கள் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். கல்லூரியின் முதல்வர் கனகராஜ் சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களை வாழ்த்தினார். கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா, துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தியதோடு ஊக்கத்தொகை வழங்கவும் பரிந்துரைத்தனர். மேலும் உடற்கல்வி இயக்குனர் சவுந்தர்ராஜன், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.