சேலத்தில் சாலை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி;

Update: 2025-04-02 03:55 GMT
சாலை பணியாளர்களின் 41 மாதம் பணி நீக்க காலத்தை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி பணிக்காலமாக அறிவிக்கக் கோரி நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கத்தினர் அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசாணையை எரிக்க முயன்ற சாலை பணியாளர்கள் சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற சாலை பணியாளர்கள், தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறையை தனியாருக்கு விடாமல் அரசே பராமரிப்பு செய்ய வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Similar News