ஆவுடையார்கோவில் - திருப்பதி மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை
பொது பிரச்சனைகள்;

அறந்தாங்கி: ஆவுடையார்கோவிலில் மாணிக்க வாசகரால் கட்டப்பட்ட திருவாசகம் பிறந்த பழ மையான ஆத்மநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வழிபாட்டுக்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆவுடையார்கோவிலில் இருந்து அறந்தாங்கி வழியாக திருப்பதிக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ் இயக் கப்பட்டு வந்தது. கரோனா தொற்று பரவலின்போது, ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த பஸ் சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை. இந்த பஸ்சால் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மண மேல்குடி, புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த பக் தர்கள் எளிதாக திருப்பதி சென்று வந்தனர். இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டதால் திருச்சி சென்று அங்கிருந்து திருப்பதிக்கு பஸ் மாறி செல்ல வேண் டிய நிலை உள்ளது. பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் ஆவுடையார்கோவில்-திருப்பதி பஸ் சேவையை மீண்டும் தொடங்க அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.