நாவல் மரம் திடீரென தீப்பற்றி எரிந்தது

கோபால்பட்டி அருகே 100 ஆண்டு பழமையான நாவல் மரம் திடீரென தீப்பற்றி எரிந்தது. நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்;

Update: 2025-04-02 05:46 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோபால்பட்டி அருகே ஒத்தக்கடை சரளைமேடு என்ற பகுதியில் திண்டுக்கல் நத்தம் தேசிய நெடுஞ்சாலை அருகே சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் சுமார் 100 ஆண்டு பழமையான நாவல் மரம் ஒன்று உள்ளது. இம்மரம் மிகவும் பழமையான மரம் என்பதால் அடிப்பகுதியிலும் மேல் பகுதிகளும் முற்றிலும் சேதம் அடைந்து எந்நேரமும் கீழே விழும் அபாய நிலையில் இருந்தது. இந்நிலையில் இன்று திடீரென நாவல் மரத்தின் உச்சிப் பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த நத்தம் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 100 ஆண்டுகள் பழமையான மரத்தில் தீ பற்றிய எப்படி என்பது குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News