வாணியம்பாடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு

வாணியம்பாடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு;

Update: 2025-04-02 06:02 GMT
  • whatsapp icon
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கக்கூடிய இலவச நாப்கின்களை வழங்காமல் வீணாக்கி வருவதாக குற்றச்சாட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன. மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிற இலவச நாப்கின்களை வழங்காமல் கேட்பாரற்று வீசப்பட்டுள்ளது. அந்த நாப்கின்கள் பள்ளியின் மைதானம் முழுவதும் சிதறிக்கிடக்கிறது. மேலும் சில நபர்களால் எரிக்கப்பட்டும் உள்ளது. மேலும் 4 மூட்டைகளில் சுமார் 3840 நாப்கின்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாத காலமாகவே இவ்வாறு நாப்கின்கள் அழிக்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது சுமார் 300 ஏழை மாணவிகளுக்கு வழங்க வேண்டிய நாப்கின்கள் இவ்வாறு வீண்போவதை எண்ணி மாணவிகளும் பெற்றோர்களும் வேதனை அடைந்துள்ளனர். எனவே பள்ளிக் கல்வித் துறையினர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதே நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கக்கூடிய இந்த நாப்கின்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது எனவே இது குறித்து மாவட்ட முழுவதும் அரசு பள்ளியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News