தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.;

Update: 2025-04-02 12:46 GMT
தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏமூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட தார் சாலையின் தரம் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதே போல கல்லுமடை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நீர் சேகரிப்பு தொட்டியினை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து வெள்ளியணைப் பகுதியில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நாற்று பண்ணையை ஆய்வு செய்து தேவையான உத்தரவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News