தேன்கனிக்கோட்டை: ராகி வைக்கோல் போர் எரிந்து சேதம்
தேன்கனிக்கோட்டை: ராகி வைக்கோல் போர் எரிந்து சேதம்;

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கண்டகாணப்பள்ளி பகுதியில் வசிக்கும் விவசாயி ராமச்சந்திரப்பா என்பவருக்கு சொந்தமான ராகி போர் தீ பற்றி திடீரென தீப்பறிக்கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்புத் துறையினர் குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் ராகி போர் சேதமானது. இதன் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.