நரிக்கட்டியூர் அருகே டூ வீலர் டிராக்டர் நேருக்கு நேர் மோதல். கணவன் மனைவி படுகாயம்.
நரிக்கட்டியூர் அருகே டூ வீலர் டிராக்டர் நேருக்கு நேர் மோதல். கணவன் மனைவி படுகாயம். வே;
நரிக்கட்டியூர் அருகே டூ வீலர் டிராக்டர் நேருக்கு நேர் மோதல். கணவன் மனைவி படுகாயம். கரூர் மாவட்டம், புலியூர், அமராவதி நகர் கேர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் வயது 44. இவரது மனைவி அமுதா வயது 40. இவர்கள் இருவரும் ஏப்ரல் 1-ம் தேதி காலை 9.30 மணி அளவில், கரூர் - திருச்சி சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் நரிகட்டியூர் பிரிவு அருகே வந்த போது, எதிர் திசையில் கரூர், மேலப்பாளையம், நத்தமேடு, ரயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் வயது 43 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டிராக்டர், சரவணன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் கணவன் - மனைவி இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னரில் இது தொடர்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், டிராக்டரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.