சிந்தாயூர் அருகே வேகமாக லாரியை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. ஒருவர் காயம்.

சிந்தாயூர் அருகே வேகமாக லாரியை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. ஒருவர் காயம்.;

Update: 2025-04-03 13:59 GMT
சிந்தாயூர் அருகே வேகமாக லாரியை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. ஒருவர் காயம். நாமக்கல் மாவட்டம், ஓடுவந்தூர், கடைவீதி பகுதியை சேர்ந்தவர் கோபால் வயது 45. இவர் நாமக்கல் பகுதியில் மகேந்திரா நேச்சுரல் பீட்ஸ் கம்பெனி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி, மாப்பு ரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் லாரி டிரைவராக பணியாற்றிவந்தார். இந்நிலையில் ஏப்ரல் 2-ம் தேதி காலை 8:30 மணி அளவில், மன்மங்கலத்திலிருந்து வாங்கல் செல்லும் சாலையில் லாரியை ஓட்டிச் சென்றார். பாலசுப்பிரமணியன். அப்போது சிந்தாயூர், நத்தமடை தோட்டம் அருகே வந்தபோது, லாரியை வேகமாக இயக்கியதால், லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணிக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த கோபால் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஒட்டி விபத்து ஏற்படுத்திய பாலசுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.

Similar News