கண்டாச்சிபுரம் அரசமரத்தடி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகவிழா

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்;

Update: 2025-04-05 02:38 GMT
கண்டாச்சிபுரம் அரசமரத்தடி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகவிழா
  • whatsapp icon
கண்டாச்சிபுரம் மடவிளாகம் அரசமரத்தடி விநாயகர், கெங்கையம்மன், திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் கணபதி பூஜை, முதலாம் கால யாக சாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு துவங்கியது. பின் அரசமரத்தடி விநாயகர், கெங்கையம்மன், திரவுபதியம்மன் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் கண்டாச்சிபுரம், புதுப்பாளையம், வீரங்கிபுரம், சித்தாத்துார், நல்லாப்பாளையம், மேல்வாலை உள்ளிட்ட பகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு உற்சவ மூர்த்தி வீதியுலா நடந்தது.ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்தனர்.

Similar News