எண்டியூர் கோச்சிங் சென்டரில் பி.ஜி.டி.ஆர்.பி., பயிற்சி வகுப்பு

வகுப்புகள் தொடங்கிய வைத்த முன்னாள் முதல்வர்;

Update: 2025-04-05 02:40 GMT
எண்டியூர் கோச்சிங் சென்டரில் பி.ஜி.டி.ஆர்.பி., பயிற்சி வகுப்பு
  • whatsapp icon
திண்டிவனம் எண்டியூர் கோச்சிங் சென்டரில், முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.நிர்வாக இயக்குனர் சேஷசயனன் தலைமை தாங்கினார். பேராசிரியர் அமிர்தவள்ளி வரவேற்றார். சிங்கப்பூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ரத்தின வெங்கடேசன் பேசுகையில், 'வாழ்வில் சாதிக்க வேண்டுமானால் உழைப்பு அவசியம் தேவை. இந்த பயிற்சி முகாமில் நீங்கள் அனைவரும் நூறு சதவீத தேர்ச்சியை பெறலாம். நான் அடுத்த முறை தமிழகத்திற்கு வரும் பொழுது அனைவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் இருக்க வேண்டும்' என்றார்.தமிழ் கல்லுாரி முன்னாள் முதல்வர் லட்சராமன், டி.ஆர்.பி., வகுப்பில் சேர்ந்து படிப்பதற்கான ஆலோசனை வழங்கினார். பேராசிரியர்கள் முத்துக்குமரன், மாலினி வாழ்த்திப் பேசினர். அலுவலக பணியாளர்கள் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

Similar News