விக்கிரவாண்டி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழப்பு
போலீசார் வழக்கு பதிந்து விசாரணை;

விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை பின்புற ரயில் பாதையில் நேற்று காலை 8:00 மணிக்கு, ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இறந்த நபர் கன்னியாகுமரி அடுத்த அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் செல்சன், 34; என்பதும், நேற்று நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ரயிலில் சென்றது தெரியவந்தது.ஆனால், அவர் எந்த ரயிலில் பயணித்தார், தற்கொலை செய்து கொள்ள ரயிலில் இருந்து குதித்தாரா, தவறி விழுந்து இறந்தரா, யாரேனும் கீழே தள்ளி கொலை செய்தார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.