விழுப்புரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்;

மத்திய அரசின் வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, த.வெ.க., சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கி பேசினார். இணைச் செயலாளர் காளிதாஸ், பொருளாளர் சுரேஷ், துணைச் செயலாளர் சுமன் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலர்கள் கோபு, கிருஷ்ணா, மைக்கேல், நகர செயலாளர்கள் முபாரக், வெங்கட், இளையராஜா, இளைஞரணி விக்கி, இர்பான், மாணவரணி விஜய், மகளிரணி பிரேமா, சாந்தி, ராபியாபேகம் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், வக்பு வாரிய சட்ட திருத்தத்தை மேற்கொண்டுள்ள மத்திய அரசை கண்டித்தும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக வக்ப் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, நிறைவேற்றியுள்ள புதிய சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் பேசினர்.