ஆசிரியர்கள் பணிபாதுகாப்பு சட்டத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஊதிய உயர்வு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்;
தூத்துக்குடி ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஊதிய உயர்வு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் மில்லர் புரத்தில் அமைந்துள்ள பி எம் சி மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு தமிழக அரசு ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் மேலும் பழைய ஓய்வு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதிக்கீடு உள்ளிட்ட அரசின் சலுகைகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முதுகலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதத்திலேயே நடத்தி முடிக்க வேண்டும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி நிரந்தர பணியிடமாக மாற்ற வேண்டும் ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மாரி செல்வம் மாவட்ட சட்ட செயலாளர் பன்னீர்செல்வம் மாவட்ட செய்தி தொடர்பாளர் பாரதிராஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பினர்