இரணியல் அருகே உள்ள வில்லுக்குறியை பகுதியை சேர்ந்தவர் ஐயப்ப பாபு (49). டெம்போ டிரைவர் . இவருக்கு நிர்மலா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி கணவர் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஐயப்ப பாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டின் அறைக்கு உள்ளே சென்ற ஐயப்ப பாபு நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதை அடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது அங்குள்ள மின்விசிறியில் ஐயப்ப பாபு தூக்கு மாட்டி தொங்கி பிணமாக கிடந்ததை கண்டனர். இதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்து பார்த்து ஐயப்பா பாபு இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை நம்ப மறுத்த உறவினர்கள் அவரை மீட்டு தக்கலை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஐயப்ப பாபு இறந்து விட்டதாக கூறினார்கள். இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து ஐயப்ப பாபு ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.