நர்சிங் கல்லூரி மாணவி மாயம்

குளச்சல்;

Update: 2025-04-05 11:45 GMT
குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரெஜி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா (45) என்ற மனைவியும் ஒரு மகனும், ஆன்சிலின் ஜினி (21) என்ற மகளும் உள்ளனர்.  மகன் ஜெர்மனி நாட்டில் படித்து வருகிறார். ஆன்சிலின் ஜினி திங்கள் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.       கடந்த ஒன்றாம் தேதி வீட்டிலிருந்து ஆன்சிலின் வெளியில் சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சுதா குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Similar News