வைக்கலூர் இணைப்பு பாலம் ஆய்வு

அதிகாரிகளுடன் கிள்ளியூர் எம்எல்ஏ;

Update: 2025-04-05 12:33 GMT
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள ஏவிஎம் கால்வாய் உள்ளது.      இங்கு இயற்கை பேரிடர்காலங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வசதியாக இரையுமன்துறையையும் வைக்கலூர் கிராமத்தையும் இணைக்கக்கூடிய ஓர் உயர்மட்ட இணைப்பு பாலத்தையும் அமைத்து தர வேண்டும். என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்தும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்ததன் அடிப்படையில்,       கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் ஏவிஎம்  கால்வாயை ஆழப்படுத்தி முழுமையாக தூர்வாரி சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இரையுமன்துறை பகுதியில் பாலம் அமைக்கவும் கடந்த 25-03-2025 அன்று நடைபெற்ற 2025-2026 -ன்  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை   மானியக் கோரிக்கை எண் : 34 ல் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.        இதனையடுத்து இன்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார்  இரையுமன்துறையையும் - வைக்கலூர் கிராமத்தையும் இணைக்கக்கூடிய உயர்மட்ட இணைப்பு பாலம் அமைக்கவுள்ள இரையுமன்துறை பகுதியை  அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.              மேலும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் 2025-2026 - ன்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை  மானியக் கோரிக்கை எண் : 49 - ல் முதலமைச்சர் சிறு விளையாட்டு மைதானம் அமைக்க ரூ.3 கோடி   நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட, கலிங்கராஜபுரம் பகுதியில் புல எண் : 451/2 -ல் 1 - ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் (பந்தடிகளம்) முதலமைச்சர் சிறு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.            நிழ்ச்சியில்   கொல்லங்கோடு நகராட்சி ஆணையர் இளவேந்தன், மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, கிள்ளியூர் மண்டல துணை வட்டாச்சியர் எட்வர்ட் ராஜசேகர்  பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News